அதிமுக நிர்வாகிகள் மீது திருச்சியில் திமுக மகளிர் தொண்டர் அணியினர் மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார்.
திராவிட முன்னேற்ற கழக திருச்சி மத்திய மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மதனா தலைமையில் 15க்கு மேற்பட்டோர் இன்று திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமனியிடம் புகார் மனு அளித்தனர்.
அம்மனுவில் கடந்த 20ம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆகியோரை ஆபாசமாகவும் அவதூறாகவும், அநாகரிகமாக மேடையில் பாட்டுப் பாடிய நபர், கைதட்டி ரசித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.