நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுக சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது…
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுக சார்பில் வார் ரூம் (war-room) அமைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதி பங்கீடு குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் திமுக 3 குழுக்களை அமைத்துள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுக சார்பில் வார் ரூம் (war-room) அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு, பூத் கமிட்டி, பரப்புரை மேற்பார்வை ஆகியவற்றை திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக விவாத குழு, நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை போன்ற பணிகளை மேற்கொள்ள திமுக துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின் தலைமையிலான குழு செயல்படும் என்றும், சட்டக் குழு மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தலைமையிலான குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)