விக்கிரவாண்டியில் ஓங்கிய திமுக கை..! தற்போதைய நிலவரப்படி..!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 9 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது.
9வது சுற்றின் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து 57 ஆயிரத்து 483 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
பாமக வேட்பாளர் சி.அன்புமணி 24 ஆயிரத்து 130 வாக்குகள் பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா 4 ஆயிரத்து 704 வாக்குகளும் பெற்றுள்ளார்.
இந்த இரண்டு வேட்பாளர்களையும் விட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 33 ஆயிரத்து 351 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை கொண்டாடும் விதமாக திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகக் கொண்டாடி வருகின்றனர்.
மொத்தம் 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில். தற்போது 9 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளது. தற்போது வரை திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 33 ஆயிரம் வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருவதால் திமுகவின் கை சற்று ஓங்கியே காணப்படுகிறது.
– லோகேஸ்வரி.வெ