காங்கிரஸ்-க்கு கை கொடுத்த திமுக..!! பாஜகக்கு ஏற்பட்ட சிக்கல்..!!
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அதிமுகவிற்கு மிகப்பெரிய வாக்கு வங்கியாக இருந்தது..
அதிமுக வெற்றி :
அதிலும் பெண்களின் வாக்கு அதிமுகவிற்கு அதிகமாக இருந்தது.. அதனால் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருந்தது..
அதிமுக வெற்றிக்கான மற்றொரு காரணமும் இருந்தது.. அதற்கு காரணம் ஜெயலலிதா பெண் தலைவர் என்பதால் பெண்களின் வாக்குகள் அந்த கட்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவியது.
ஆனால் ஜெயலலிதா அம்மா இருந்த பிறகு திமுகவிற்கு ஜாக்பாட் என சொல்லலாம்.., 50% சதவீகிதமாக இருந்த பெண்களின் வாக்கு கடந்த தேர்தலில் திமுகவிற்கு 85% அதிகரித்தது.
திமுக அசத்தல் வாக்குறுதி :
மகளிர் உரிமை தொகை + இலவச பேருந்து + புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட பெண்களுக்கான திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் திமுக பெண்களுக்கான வாக்குறுதிகளை கூறி அமோக வெற்றி பெற்றது.
பெண்களின் ஆதரவு :
இது குறித்து நம்மிடம் பேசிய சில அரசியல் விமர்சகர்கள், இப்போது பெண்கள் வாக்குகள் அதிகம் வந்தால் அது திமுக வாக்குகள். திமுக வாக்குகள் வந்து குவிந்து உள்ளது.
பெண்கள் வாக்குகளை மொத்தமாக பல்வேறு திட்டங்கள் மூலம் அள்ளி உள்ளனர். மகளிர் உரிமை தொகை, இலவச பேருந்து மூலம் இப்படிப்பட்ட பெண்களின் வாக்குகளை பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் ஆதரவு :
இப்போது திமுகவின் ஸ்டைலை தேசிய அளவில் காங்கிரஸ் கடைபிடிக்க தொடங்கி உள்ளது.
உதாரணமாக கர்நாடகாவில் இதே இலவச பேருந்து + உரிமை தொகை திட்டம் அங்கே காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க காரணமாக இருந்தது.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இது மாறி உள்ளது. இமாச்சல பிரதேசத்திலும் காங்கிரஸ் வெல்ல இது காரணமாக இருந்தது.
இப்போது தேசிய அளவில் பெண்கள் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகிவிட்டது என சொல்லலாம்.
மோடி பேச்சு :
பெண்களின் ஆதரவு காங்கிரஸ்பக்கம் திரும்பியுள்ளதை உணர்ந்த மோடி, தேர்தல் பிரசாரத்தின் போது.., தாலி செண்டிமெண்ட் பற்றி பேசியுள்ளார்.
ஆனால் அதற்கும் ஆசையாத பெண்கள் காங்கிரஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் அறிக்கை :
ஏற்கனவே காங்கிரஸ் கொடுத்த தேர்தல் வாக்குறுதியில்,
ஒவ்வொரு ஏழை இந்திய குடும்பத்திற்கும் நிபந்தனையற்ற பணப் பரிமாற்றமாக ஆண்டுக்கு ₹ 1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டத்தை தொடங்க காங்கிரஸ் அறிவித்து உள்ளது.
வருமான லிஸ்டில் அடிமட்டத்தில் உள்ள குடும்பங்களில் ஏழைகள் அடையாளம் காணப்படுவார்கள். இவர்களின் வீட்டு பெண்களுக்கு வரும் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
அந்தத் தொகை, குடும்பத்தின் மூத்த பெண்ணின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றப்படும். வீட்டில் பெண் இல்லாவிட்டால், அது குடும்பத்தின் மூத்த உறுப்பினரின் கணக்கிற்கு மாற்றப்படும்.
இந்தத் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் பயனாளிகளின் குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் வறுமையை ஒழிப்பதில் அதன் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக மதிப்பாய்வு செய்யப்படும்.
2025 முதல் மத்திய அரசு வேலைகளில் ஒன்றரை (50 சதவீதம்) பெண்களுக்கு ஒதுக்குவோம் என்று காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இந்த திமுக ஸ்டைல் அறிவிப்பு பெண்களுக்கு தேசிய அளவில் காங்கிரஸ் பக்கம் கவனத்தை திருப்ப தொடங்கி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..