மனைவியிடன் இருந்து விவாகரத்து… குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி..!
மனைவியிடன் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி மனுதாக்கல்.
ஜெயம் திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் ஜெயம்ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிய இருப்பதாக பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில் ”நீண்ட கால யோசனைக்கு பிறகும் பல பரிசீலனைக்கு பிறகும் ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன்.
இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்டது. எனவே எனது தனியுரிமையையும் எனது நெருக்கமானவரின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்த சூழலில் இன்று தனது மனைவி ஆர்த்தி இருந்து விவாகரத்து கோரி ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மேலும் 2009 ஆண் பதிவு செய்யப்பட்ட தங்களது திருமணத்தை ரத்து செய்யுமாறு கூறியுள்ளார். இந்த மனு தாக்கல் அடுத்த மாதம் அக்டோபர் 10 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.