தமிழ் புதல்வன் திட்டம் – நிகழ்ச்சியை நடத்தி வைத்த மாவட்ட ஆட்சியர்..!
வேலூர் மாவட்டம்,வேலூரில் உள்ள ஊரிசு கல்லூரியில் மாதம் தோறும் கல்லூரி மாணவர்களுக்கு 1000 உதவித்திகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் கோவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
இதனையடுத்து இன்று நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நிகழ்ச்சி நடந்தது இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், அமுலு,மேயர் சுஜாதா துணை மேயர் சுனில்,மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு குடியாத்தம் நகரமன்ற தலைவர் சௌந்தர் உள்ளிட்டோரும் திரளான மாணவர்களும் பேராசிரியர்களும் பங்கேற்றனர் மாணவர்கள் மாதம் 1000 தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் பெறும் ஸ்மார்ட் கார்டுகளை ஆட்சியர் வழங்கினார்.
இந்த திட்டத்தினால் 47 கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகள் சேர்ந்த 4983 மாணவர்கள் பயனடைவார்கள்.
-பவானி கார்த்திக்