“என்னை தொடதே” யோகிபாபு – வலைப்பேச்சு சண்டையில் வசகமாக சிக்கிய அஜித்!
தமிழ் சினிமாவின் ஜெண்டில் மேன் நடிகர் என்று அழைக்கப்படுபவர் அஜித். இவர் மீது பல வருடங்களாக எந்தவொரு சர்ச்சையும் இல்லாமலே இருந்து வந்தது. ஆனால், நேற்று முதல், அஜித்தின் பெயர் மிகப்பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது.
அதாவது, நடிகர் யோகி பாபு, சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்றில், வலைப்பேச்சு குழுவினரை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இவரது இந்த கருத்தை விமர்சிக்கும் வகையில், நேற்று வலைப்பேச்சு குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு, யோகி பாபுவை சரமாரியாக விமர்சித்தனர்.
மேலும், படப்பிடிப்பில் இருந்தபோது, “Don’t Touch” என்று அஜித், யோகி பாபுவிடம் கூறியதாகவும், இதனை யோகிபாபுவே, தங்களிடம் கூறியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் சண்டை ஒரு புறம் நடந்துக் கொண்டிருக்கும் வேளையில், நடிகர் அஜித் தீண்டாமையை கடைப்பிடித்தாரா என்ற கோணத்தில், விவாதம் கிளம்பி புகம்பமாக வெடித்து வருகிறது.
-பவானி கார்த்திக்