நீட் தேர்வு தமிழ்நாட்டில் இப்படி தான் நுழைந்ததா..?
கடந்த சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்விற்கு எதிராகவும், ஒன்றிய அரசுக்கு எதிராகவும், ஆளுநரை கண்டித்தும் இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.
திமுக எதிர்கட்சியாக இருந்த போது நீட் தேர்விற்கு எதிராக போராட்டம் நடத்தியது. இப்பொழுது எதிர்கட்சி யார்? அதிமுக அவர்கள் நீட் தேர்விற்கு எதிராக போராட்டம் நடத்தாமல் என்னை பார்த்து கேள்வி கேட்கிறார்கள்.
ஆம் நான் தான் கூறினேன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று. ஆனால் அதற்காக நான் இன்று வரை போராடி வருகிறேன்.
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் நீட் நுழைந்து விட்டது. ஆனால் கலைஞர் இருந்த வரை நீட் நுழையவில்லை. ஏன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை கூட நீட் நுழையவில்லை. அவர் மறைந்தார். அதன் பின்னர் பாஜகவின் அடிமைகளை வைத்து கொண்டு தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு நீட் தேர்வை நுழைத்து விட்டது.
அரியலூர் அனிதா தொடங்கி இன்று வரை எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. ஒன்றிய அரசு கொலை செய்து விட்டது.
நீட் தேர்வு ஆகிவைகளுக்கு எதிராக அதிமுக கண்டனம் தெரிவிக்கலாம். உங்களுக்கு கண்டனம் தெரிவிக்க கூட பயமாக இருந்தால் வருத்தம் தெரிவிக்கலாம். ஆனால் அதை விட்டு எங்களை பார்த்து கேள்விகள் கேட்கிறீர்கள்.
மதுரையில் மாநாடு எப்படி நடந்தது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நடந்தது. அங்கு என்ன பேசினார்கள். சமையல் எப்படி இருந்தது என்று தான். மதுரை மாநாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக பேசி இருக்கலாமே.
மதுரை மாநாட்டில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகி காவல் நிலையத்தில் மாநாட்டிற்கு அழைத்து வந்த எனது மனைவியை காணவில்லை என புகார் செய்துள்ளார். போலீசார் முதலில் கூப்பிடப்போவது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணனை தான் மாநாட்டிற்கு பொறுப்பில் இருந்தார்..
கடந்த 9 ஆண்டு காலம் இந்தியாவை ஆட்சி செய்த பாஜக அரசின் ஊழல் பட்டியலை சிஏஜி(இந்திய தலைமை தணிக்கை குழு) அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 1கிலோ மீட்டர் சாலை அமைக்க ரூ.250 கோடி, மத்திய அரசின் மருத்து காப்பீட்டு திட்டத்தில் ரூ.88 ஆயிரம் கோடி மோசடி நடந்துள்ளது.
“ரமணா” படத்தில் மருத்துவத்தில் எப்படி முறைகேடு நடக்கிறது என்பதை பார்த்தோம். ஆனால் இன்று உண்மையாக நடந்துள்ளது.., மோடி பிரதமராக பொறுப்பேற்றவுடன் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிக்கை வெளியிட்டார். ஏன் என கேட்டதற்கு இந்தியாவின் கருப்பு பணம் ஒழிக்க வேண்டும் என்றார்.
ஒவ்வொருவர் வங்கி கணக்கில் பணம் செலுத்துவதாக சொன்னார்கள் ஆனால் கூறிய பணம் என்ன ஆனது. இன்று வரை 15ரூபாய் கூட போடவில்லை. கொரோனா காலத்தில் பிரதமர் நிதி என்ற பெயரில் திரட்டப்பட்ட தொகை என்ன ஆனது.
இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டால் அதற்கு உரிய பதில் தரப்படவில்லை. இவ்வாறு இரண்டு கொள்ளையர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும். இதில் அமைச்சர்கள் மெய்யநாதன், அன்பில்மகேஷ் பொய்யமொழி, நகர ஒன்றிய இளைஞரிணி செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Discussion about this post