தமிழ்நாடு மாணவர்கள் மருத்துவர் ஆவது பெரிய சவாலான ஒன்றாக மாறிவிட்டது..! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேதனை..!!
தமிழ்நாடு மாணவர்கள் மருத்துவர் ஆவது மிகப்பெரிய சவாலாக மாறிவிட்டது. என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை அருகே பட்டுக்கோட்டையில் கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு மேடை விட்டு இறங்கியவுடன் செய்தியாளர்கள் நீட் தேர்வு குறித்து கேட்டுள்ளனர்.
தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவை ஒன்றிய அரசு பாழாக்குகிறது, எத்தனையோ மாணவர்கள் நீட் தேர்வினால் மாய்ந்து போகிறார்கள்.., அதை தடைசெய்யக்கோரி ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் கடிதமும் அனுப்பினார் இருந்தும் பலன் இல்லை. தமிழகம் முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தப்பட்டது.
அதை ஒன்றிய அரசு கண்டு கொள்ள வில்லை.., நாங்கள் நடத்துவது நாடகம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். நாங்கள் நடத்துவது நாடகமாகவே இருந்தாலும் இந்த நாடகத்தை நிறுத்துவதற்காக நீட்டை தடை செய்யலாம்.
எத்தனை எதிரிப்புகள் வந்தாலும் மாணவர்களின் நலனுக்காக.., நீட்டை தடை செய்ய நாங்கள் போராடுவோம் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..