பாரத சாரணர் இயக்க வைரவிழா..!! திருச்சி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
பாரத சாரணர் இயக்க வைரவிழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி புறப்பட்டுள்ளார்.
திருச்சி மணப்பாறையில் பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி விழா நடைபெற்று வருகிறது. இதனை கடந்த ஜனவரி 28ம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த விழாவில் 24க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், 4 வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என சுமார் 20 ஆயிரம் சாரண-சாரணியர்கள் பங்கேற்று உள்ளனர். இந்நிலையில் இவ்விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி புறப்பட்டுள்ளார்.
அங்கு சாரண-சாரணியர் இயக்க வைர விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை ஆற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதலமைச்சரின் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..