ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் சென்ற பக்தர்கள் வேதனை..?
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில்.., கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது, இலவச தரிசனத்தில் 3ம் பிராகாரம் வரை 200 மீட்டர் தூரம் வரை, பக்தர்கள் 2 மணி நேரம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
காற்றோட்டம் இல்லாததால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர், கோயில் உண்டியல் காணிக்கை, தரிசனம் டிக்கெட் என கடந்த ஆண்டில் இந்த ஆண்டு 30 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது.
ஆனால் இவ்வளவு காணிக்கை வசூல் ஆகியும், கோவிலில் கழிப்பறை வசதி, மின்விசிறி மற்றும் இருக்கைகள் என எதுவும் இல்லை என்பதும் வேதனைக்குரியது, நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
ஆனால் அவர்களின் நலன் கருதி இந்துசமய அறநிலைய துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் வேதனைக் குறிய குற்றமாக உள்ளது என பக்தரகள், ஹிந்து சமய அறநிலைய துறை மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடார்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி.