அம்மனுக்கு பால் குடம் எடுத்த பக்தர்கள்..
ராணிப்பேட்டைமாவட்டம்,வாலாஜா அருகே அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயத்தின் 45 ஆவது ஆண்டு நான்காம் வெள்ளி ஆடி திருவிழாவை முன்னிட்டு பாலாற்றின் கரையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ படவேட்டம்மனின் கரகம் தேர் வாகனத்தில் அமர வைத்து 1008 பால்குடங்களை பக்தர்கள் தலைகளில் சுமந்த படியும் அலகுகளை குத்தி நகரின் முக்கிய
சாலையின் வழியாக இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு மேளதாளங்கள் முழங்க பக்தி பரவசத்தோடு ஊர்வலமாக வருகை தந்து ஸ்ரீ படவேட்டம்மனை ஆலயத்தில் வைத்து வேத மந்திரங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்த பால்குடங்களை வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ படவேட்டம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மேற்கொண்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
-பவானி கார்த்திக்