ஆடி அமாவசை அன்று கோவில் குளங்களில் குவியும் பக்தர்கள்..!! ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு..!
கரூரில் மாயனூர், வாங்கல், குளித்தலை காவிரி ஆற்றங்கரையில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் செய்துள்ளனர். அப்போது அங்குள்ள கழிவறை மற்றும் உடைமாற்றும் அறைகள் பயன்படுத்த முடியாமல் இருந்ததால்.., அறைகளை சரி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அமவாசைகளிலும் முக்கியமானது தை அமாவாசை, ஆடி அமாவாசை, மற்றும் புரட்டாசி அமாவாசை. இந்த மூன்று மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பதும் ஐதீகம். அதன் படி, ஆடி அமாவாசையான இன்று காவிரி ஆற்றுக்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் மாயனூர், வாங்கல், மற்றும் குளித்தலை உள்ளிட்ட ஆற்றங்கரையில் பொதுமக்கள் புனித நீராடி, அவர்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துள்ளனர். மேலும் அங்கு வந்த பலரும் அவர்களின் மூன்று தலைமுறை முன்னோர்களின் பெயரை சொல்லி தர்ப்பணம் செய்துள்ளனர்.
தர்ப்பணம் கொடுத்து முடித்த பின்.., அவர்கள் பூஜை செய்து பிண்டங்களை காவிரி ஆற்றில் விட்டு முன்னோர்களை வணங்கி, தர்ப்பணம் கொடுத்தவர்கள் அவர்களின் இல்லங்களுக்கு சென்று முன்னோர்களின் படத்தை வைத்து அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழங்கள் உள்ளிட்டவற்றை படையல் இட்டு வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
மேலும் உடை மாற்றும் அறை மற்றும் கழிவறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால், அதை சரி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post