மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் உற்சாகத்தில் பக்தர்கள்..!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கடந்த 19ம் தேதி காலை வைகாசி அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தை தொடர்ந்து.., வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்பட்டு, தீப ஆராதனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றுள்ளது. சிம்ம அலங்காரத்தில் உஞ்சலில் எழுந்தருளினார், இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
மேலும் பல பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டார், கோவில் பூசாரிகள் மற்றும் பக்தரகள், அம்மனுக்கு தாலாட்டு பாடி ஊஞ்சல் ஆட்டி மகிழ்ந்தனர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர்.
கோடை விடுமுறை என்பதால் இன்று வரை மேல்மலையனூர் அங்காள அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி.

















