குழந்தை பாக்கியம் தரும் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் ஆலயத்தில் ஞாயிறு திருவிழா
வேலூர் மாவட்டத்தில், குழந்தை பாக்கியம் தரும் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் ஆலயத்தில் கடை ஞாயிறு திருவிழா கோலாகலமாக நடைப்பெற்றது.
விரிஞ்சிபுரத்தில் மார்கபந்தீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்று கிழமை முன்னிட்டு நடைப்பெற்ற கடை ஞாயிறு விழாவில் தமிழக ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று நேர்த்திகடனை நிறைவேற்றினர்.