சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி..!! ஆனால் அதற்கு மட்டும் தடை..!!
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் பௌர்ணமி தினங்களுக்காக 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.இந்த கோவிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இன்றும் இத்தளத்தில் சித்தர்கள் வாழ்ந்து வருவதால் இது சித்தர்களின் சொர்க்க பூமி எனவும் நினைத்த காரியங்கள் நடைபெறும் எனவும் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமியை தரிசனம் செய்கின்றனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல மாதந்தோறும், பிரதோஷம், அம்மாவாசை பௌர்ணமி ஆகிய 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையை சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி என்பது வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாளை(17.08.24) ஆவணி மாத பிறப்பு மற்றும் சனி பிரதோஷம் மேலும் வரும் திங்கட்கிழமை(19.08.24) ஆவணி மாத பௌர்ணமி தினங்களை முன்னிட்டு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட நாட்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர், இந்நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேற அனுமதி கிடையாது என்றும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..