முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மாநில அளவிலான இரண்டாவது ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் வளர்ச்சி என்பது மக்களின் வாழக்கை தரம் மற்றும் மக்களின் மகிழ்ச்சி போன்றவற்றை அளவீடாக கொண்டு தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கிராமங்களின் வளர்ச்சி மிக முக்கியமானது கிராமங்களில் உள்ள பிரச்சனைகளை மைக்ரோ அளவில் கவனிக்க வேண்டும். அதற்காகவே இந்த ஆய்வு கூட்டம் நடத்தபட்டு வருகிறது நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒவ்வொரு ஆண்டும் தொகுதிக்காக ஒதுக்கப்படும் ரூ.5 கோடி நிதி மூலமாக பல்வேறு பணிகள் ஊரகப் பகுதியில் நிறைவேற்றப்படுகிறது. பொதுமக்கள் அனைவர்க்கும் சமமான தரமான மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதே தேசிய நல்வாழ்வுக் குழுமத்தின் நோக்கம்.
இதற்காக தமிழ்நாடு பொறுத்தவரையில், மக்களைத் தேடி மருத்துவம், நடமாடும் மருத்துவக் குழு, இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மைக் காக்கும் 48, காசநோய் இறப்பில்லாத் திட்டம், நடமாடும் மருத்துவமனை,மனம் – மனநலத்தை மேம்படுத்துதல் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் மாநிலம் முழுவதும் அணைத்து குடும்பத்தினரின் உணவு பட்டதுக்காப்பை உறுதி செய்யும் வகையில்
அணைத்து குடும்பத்தாருக்கும் அரிசி மற்றும் கோதுமை விலையில்லாமல் வழங்கப்படுகிறது. மேலும் அவர் பேசுகையில், கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தொகையில் 50%க்கு மேல் ஆதிதிராவிடர் வாழும் கிராமங்களை தேர்ந்தெடுத்து கிராம புறங்களின் வளர்ச்சியை உறுதி செய்ய பிரதமரின் முன்னோடி கிராமத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு கிராமத்திற்கு ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.23 மாவட்டங்களைச் சேர்ந்த 1,357 வருவாய் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசின் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அதனுடைய செயல்பாடுகள் கடைக்கோடி மக்களிடம் சென்றடைய வேண்டும் எனபதே அரசின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.