பைக் டாக்சியில் பயணிப்போர் விபத்தில் சிக்கினால் நிவாரணம் மறுப்பு…!! ஒன்றிய அரசு அறிவிப்பு…!!
அரசுப் பணிமனைகளை கணினி மயமாக்கும் செயல்பாட்டை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஒன்றிய அரசு இருசக்கர வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. எனவே பைக் டாக்சி குறித்து தமிழ்நாடு அரசு மட்டும் முடிவெடுக்க முடியாது என்றும் ஒன்றிய அரசுடன் இணைந்துதான் முடிவெடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
எனவே வாடகை அல்லாத வாகனங்களில் ஒருவர் பயணிப்பது சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்றும். வாடகை அல்லாத வாகனங்களில் ஒருவர் பயணிப்பது சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. சிறு விபத்து ஏறரபட்டாலும் நீதிமன்றத்தில் நிவாரணம் மறுக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே பைக் டாக்சிகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் பைக் டாக்சியில் பயணிப்போர் விபத்தில் சிக்கினால் இன்சூரன்ஸ் பெறுவதில் வித்தியாசம் உள்ளது. ஒன்றிய அரசு அது குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கிறோம். எனக்கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..