தீபத்திருநாளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!! கட்டண வசூல்..? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்…!!
தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரசுப் பணிமனைகளை கணினி மயமாக்கும் செயல்பாட்டை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதனை தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் ஒரு கி.மீ க்கு 52 காசுதான் பேருந்துப் பயணக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது . அருகில் உள்ள மாநிலங்களில் 1.10 காசு வரை ஒரு கி.மீ க்கு கட்டண வகிதமாக உள்ளது. போக்குவரத்து துறை ஒரு சேவைத்துறை, எனவே நட்டம் ஏற்படாத வகையில் அரசு அதை ஈடுசெய்து வருகிறது.
பேருந்து போக்குவரத்தால் தான் தமிழகத்தில் சமச்சீர் வளர்ச்சி இருக்கிறது. மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டமான விடியல் பயணத் திட்டத்திற்கான தொகை போக்குவரத்து துறைக்கு தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
மேலும் திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..