தேமுதிக தலைவர் விஜயகாந்த உடல் நிலை மோசம்..! விஜயபிராபகரன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..
தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை சற்று மோசமாக தான் இருக்கிறது. என அவரது மகன் விஜயபிராபகரன் வேதனை தெரிவித்துள்ளார்.
தேமுதிக நிறுவன தலைவரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன், மற்றும் அவரின் இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் இருவரும் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர்.
சாமி தரிசனம் செய்து முடித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜயபிராபகரன்.., எங்கள் அப்பா உங்கள் கேப்டன் உடல்நிலை மோசமாக தான் இருக்கிறது.., அவருக்கு தொடர் மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.., அவர் உடல்நலம் தேர்ச்சி பெறுவதற்காக பல கோவில்களில் அவருக்காக பிரார்த்தனைகளை தேமுதிக தொண்டர்களும்.., மக்களும் செய்து வருகின்றனர்.
“முடியாது என்ற ஒன்று முட்டாளுக்கு சொந்தமான ஒன்று” என அப்பா எப்பொழுதும் சொல்லிகொண்டே இருப்பார்.. அவரின் அந்த சொல்லை தான் நாங்கள் தாரக மந்திரமாக எடுத்துள்ளோம். என் கனவை கூட ஒதுக்கி வைத்துவிட்டு தொண்டர்களுக்காக ஓடோடி வந்து வேலை செய்கிறேன்.
அதிமுக கட்சிக்குள் குழப்பம் நிலவி கொண்டு வருகிறது.., இங்கு இருந்த சில தொண்டர்கள் கூட தேமுதிகவில் காசு வாங்கி கொண்டு அதிமுகவிற்கு சென்று விட்டார்கள்.., எங்களோடு இருக்கும் பொழுது அண்ணி, தம்பி என சொன்னவர்கள் அதிமுக சென்ற பின் அன்னியவாதி என சொல்லுகிறார்கள். இதை எல்லாம் தாண்டி மக்களின் மீது நம்பிக்கை வைத்து என் அப்பாவின் கனவை நான் நிறைவேற்றுவேன்..
கேப்டன் குணமாக வேண்டும் என்று எங்களை விட மக்கள் தான் அதிகம் பிரார்த்தனை செய்து வருகின்றார்கள்.. அவர்களின் நம்பிக்கை பொய் ஆகாது.., விரைவில் அவர் உடல்நலம் பெற்று உங்களிடம் வந்து பேசுவார். என செய்தியாளர்களை சந்தித்த பிரபாகரன் கூறினார்.
Discussion about this post