எங்கள் கூட்டணியின் பெயரை பாரத் என வைத்தால் என்ன செய்வீர்கள் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜி20 அமைப்பு தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அனுப்பியுள்ள அழைப்பிதழில் பாரத ஜனாதிபதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதில் பாரத ஜனாதிபதி என்று குறிப்பிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,
“எதிர்க்கட்சி கூட்டணி தன்னை ‘பாரத்’ என்று அழைக்க முடிவு செய்தால், ஆளும் கட்சி நாட்டின் பெயரை ‘பாஜக’ என்று மாற்றுமா?” எழுப்பியுள்ளார்.”பெயர் மாற்றம் நடப்பதாக எனக்கு அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. பல எதிர்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து, அதற்கு இந்தியா என்று பெயரிட்டதால் மட்டும், ஒன்றிய அரசு நாட்டின் பெயரை மாற்றுமா? நாடு 140 கோடி மக்களுக்கு சொந்தமானது. ஒரு கட்சிக்கு அல்ல. கூட்டணியின் பெயரை பாரத் என்று மாற்றினால் பாரதம் என்ற பெயரை பாஜக என்று மாற்றுவார்களா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.