வீட்டின் பின்புறத்தில் விளையாடிய ஒன்றரை வயது குழந்தை.. எமனாக வந்த தண்ணீர் அண்டா..!
குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்துள்ள கல்லங்குழி பயித்தங்காலவிளை பகுதியை சேர்ந்தவர் நிம்மி பி.எம். ஜோஷி (30). இவருக்கு திருமணமாகி கணவருடம் ஏற்பட்ட கருத்து வேறுப்பாடு காரணமாக கணவரை பிரிந்து தனது ஒன்றரை வயது குழந்தையுடன் கல்லங்குழியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் நிம்மி ஜோஷி வேலைக்கு செல்வதால் குழந்தையை தனது தாயிடம் விட்டு செல்வது வழக்கம். அதே போல் நேற்று காலை வழக்கம் போல் குழந்தையை தாயார் மேபல் ரூபியிடம் விட்டு விட்டு வேலைக்கு சென்றார்.
அப்போது குழந்தை வீட்டின் பின்புறத்தில் விளையாடி கொண்டு இருந்தபோது, அங்கிருந்த தண்ணீர் பாதியளவு நிரம்பிய சில்வர் அண்டாவில், குழந்தை தவறி தலைக்கீழாக கவிழ்ந்து விழுந்துள்ளது.
அவரது பாட்டி வேறு வேலை செய்து கொண்டிருந்ததால் குழந்தை அண்டாவில் விழுவதை கவனிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நீருக்குள் விழுந்த குழந்தை மூச்சு விட சிரமபட்டு பரிதாபமாக மூச்சுத்திணறி உயிரிழந்தது.
இது குறித்து தகவறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்