ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிடம் நடத்துனர் செய்த வேலை.. தர்ம அடி..!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் வசித்து வரும் சஜன் (37) என்பவர் தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை செய்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து இரிஞ்சிலாக்குடா பேருந்து நிறுத்தம் அருகே நின்றது.
அப்போது பள்ளி மாணவி ஒருவர் பேருந்தில் ஏறினார். இந்த மாணவியிடம் சஜன் தவறான முறையில் நடந்து கொண்டதோடு கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனக்கு நடந்த சம்பவங்கள் குறித்து பள்ளிக்கு சென்ற பிறகு ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மாணவியின் சகோதரர் உட்பட சிலர் சம்பந்தப்பட்ட பேருந்து நிறுத்தத்திற்கு சென்று சஜனை பிடித்து தாக்கிய பின்னர் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோவின் கீழ் சஜனை கைது செய்து தொடர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்