இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். கடந்த 2019-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்காக தேசிய விருதை வென்றார்.
இதற்கிடையில், கடந்த 2008 ஆம் ஆண்டு இமான் மோனிகா ரிச்சர்டு என்பரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்ட ரீதியாகத் தனது மனைவியைப் பிரிந்துவிட்டதாக ட்விட்டர் மூலம் இமான் அறிவித்தார்.
தற்போது இமான் மறுமணம் செய்து கொள்ளப் போவதாக கோலிவுட்டில் தகவல் தெரிவிக்கின்றன. சென்னையைச் சேர்ந்த உமா என்பவருக்கும் டி.இமானுக்கும் வரும் மே மாதம் திருமணம் நடக்க இருக்கிறதாம். பெரியவர்கள் பேசி நிச்சயிக்கப் பட்ட திருமணம் இது என்கிறார்கள்.
இமான் வீட்டார் மற்றும் உமாவின் வீட்டார் இது தொடர்பாகப் பேசி முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் இது தொடர்பாக இமானே அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.