கமலஹாசன் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி வந்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும்,நடிகருமான கமல்ஹாசன் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் பெயரில் நடிகர்-நடிகைகள் தேவை என்றும், ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் ‘இன்ஸ்டாகிராம்’சமூக ஊடகத்தில்
விளம்பரம் வெளியானது.
இதை நம்பி விண்ணப்பித்தவர்களிடம் ‘டிஜிட்டல்’ முறையில் பணம் பெறப்பட்டது.
ஆனால் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படாமல் போனதால் பணத்தை இழந்தவர்கள் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனத்தை தொடர்புக் கொண்டனர்.
அப்போது தான், கமல்ஹாசனின் பட தயாரிப்பு நிறுவனம் பெயரை பயன்படுத்தி போலி விளம்பரம் கொடுத்து மிகப்பெரிய பணமோசடி அரங்கேறி இருப்பது தெரிய வந்தது. இந்த மோசடி தொடர்பாக கமல்ஹாசனின் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆக.1-ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டது குறித்து தேடிவந்த நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த சுதாகரன் (26), புகழேந்தி (20) ஆகிய 2 பேரையும் வெள்ளிக்கிழமையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர் அவர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்திய 3
கைப்பேசிகள், ஒரு லேப்டாப், ஆகியவை பறிமுதல் செய்தனர்.
பின்னர் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தியதில் 40 பேரிடம் மோசடி செய்ததாக ஒப்புக்கொண்டனர். இருவரும் திரைப்பட வாய்ப்பு தேடும் இளைஞர்கள், இளம்பெண்களை குறி வைத்து இந்த மோசடியை செய்து வந்துள்ளனர் என்பதும் தற்போது 40 பேரிடம் இருந்து இதுவரை . ரூ.10 லட்சம் வரை இருவரும் பண மோசடி செய்துள்ளனர் என்பதும் புதிய சிம்கார்டுகளை அடிக்கடி மாற்றி கொண்டனர் மேலும் இதில் 13 சிம் கார்டுகளை
அழித்துள்ளனர்.
இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே திருப்பூர், அடையாறு, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் 3 மோசடி வழக்குகள் பதிவு ஆகி உள்ளது. இரு மோசடி நபர்களையும் சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Discussion about this post