இஸ்ரேல் நடத்திய சைபர் கிரைம் தாக்குதல்..! பின்னடைவில் ஈரான்…!!
இஸ்ரேல் உளவுத்துறை நடத்திய சைபர் கிரைம் தாக்குதலில் ஈரான் அரசின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது . அணுசக்தி தளங்களின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் இஸ்ரேல் இடையிலான தாக்குதல்களால் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஈரானின் சிவில் ஏவியேஷன் அமைப்பு விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது செல்போன்களைத் தவிர பேஜர்கள் மற்றும் வாக்கிடாக்கிகள் போன்ற மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களை விமானங்களில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, செக் இன்கள் மற்றும் லக்கெஜ்களில் பேஜர்கள் மற்றும் வாக்கிடாக்கிகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரானில் விமான பயணிகள் செல்போன்களைத் தவிர மற்ற எந்த தகவல் தொடர்பு சாதனங்களையும் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வெளியுறவு தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன் பல செயல்கள் முடக்கபட்டு ஈரானை நிலைகுலையை வைத்துள்ளது