இடிந்து விழுந்த அரசு பள்ளி சுவர்..!! மாட்டின் உரிமையாளர் அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி..!!
பெரம்பூர் M.H.ஸ்கூல் ரோடு சாலையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் சுவருகள் இடிந்து விழுந்ததில் 3 பசு மாடுகள் பலி..
அரசு பள்ளி சுவர் இடிந்ததில் பசு மாடுகள் உயிரிழந்ததை அடுத்து பள்ளி மாணவிகள் மீது இதே விபத்துக்கள் ஏற்பட்டிருந்தால் தமிழக அரசு இதே பதில் கூறுமா என கேள்வி எழுப்பினார் பாதிக்கப்பட்ட பசு மாட்டின் உரிமையாளர்..
சென்னை பெரம்பூர் மாதவரம் எம் ஹெச் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பல ஆண்டுகளுக்கு பழமையான பள்ளிகளாக நிகழ்ந்து வருகிறது..
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் மாணவிகள் பயின்று வருகின்றன.. பெரம்பூர் M.H.சாலை ஸ்கூல் சாலை உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியை சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர் மேயர் பிரியா அவர்கள் நேரடியாக பார்வையிட்ட பிறகு 44 வது வார்டு கவுன்சிலர் நரேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் பார்வையிட்டும் சீரமைக்கும் பணிகள் சமீபத்தில் நடைபெற்றது..
இந்நிலையில் தான் பழமையான அரசு பள்ளிக்கூடம் சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்ததும்.. வலது பக்கம் சுவர் சீரமைத்தும் இடது புரம் சுவர் பராமரிக்காமல் அலட்சியமாக விட்டததும்.., n நேற்று சனிக்கிழமை என்பதால் அரசு பள்ளிகள் விடுமுறை அளிக்கபட்டது..
இந்நிலையில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் சுவர்கள் மிகவும் பழைமை வாய்ந்தது மழையினால் ஈரப்பதம் காரணமாக பராமரிப்பு இன்றி இருந்ததால் இன்று மாலை திடீரென செவர் இடிந்து விழுந்ததில் 3 பசு மாடுகள் உயிரிழந்தது..
தலைமுறை தலைமுறையாக பசு மாடுகளை வைத்து பால் கறக்கும் தொழிலாக செய்து வந்த தமிழ்மணி என்பவர் வீட்டிலிருந்த வளாகத்தில் பசுமாடுகளை கொண்டு எதிரே அரசு பள்ளி சுவற்றில் கட்டியதும்
பசு மாட்டின் வளகத்தை சுத்தம் செய்ய உள்ள சென்றதும் அதிக சத்தம் திடீரென கேட்டதும் வெளியே ஓடிவந்து பார்த்தபோது அரசு பள்ளி சுவர் இடிந்து 3 பசுமாடுகள் உயிரிழந்த சம்பவம் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்..
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பெரம்பூர் வட்டாட்சியர், போலீசார் என அனைவரும் வந்து பார்வையிட்டனர்.,
பின்னர் 3 பசு மாடுகள் சுவர் இடிந்து உயிரிழந்து குறித்து அரசு பள்ளி கூட சுவற்றில் மாடுகளை கட்டுவது உன்னுடைய தவறு தான் என அரசு அதிகாரிகள் கூறியதால்.. மாட்டின் உரிமையாளர் தமிழ்மணி மிகவும் மனம் உடைந்துள்ளார்..
அரசு மேல்நிலைப்பள்ளி யின் சுவர் பசுவின் மீது விழுந்தது., அரசு மேல் நிலை பள்ளி மாணவிகள் மீது விழுந்து இருந்தால் அரசு அதிகாரிகள் இதே பதில் அளிப்பார்களா என பசு மாட்டின் உரிமையாளர் தமிழ்மணி கேள்வி எழுப்பினார்..
இருப்பினும் பசு மாட்டின் உரிமையாளர் தமிழ்மணி என்பவர் மாற்றுத்திறனாளி என்பதால் அருகில் இருக்கக்கூடிய யாரும் உதவிக்கு வராததால் அவரிடம் சமரசமாக பேச்சுவார்த்தை நடத்த இந்த பிரச்சனையை முடித்து வைத்தனர்..
சத்யா. கே
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..