சைபர் க்ரைம் மோசடி..!! பறிபோன 1500 கோடி…!! முன்னாள் டி.ஜி.பி சைலேந்திர பாபு அறிவுரை…!!
செல்போன் பார்ப்பதை குறைத்தாலே தகவல் திருட்டில் இருந்து தப்பிக்கலாம் என விருதுநகரில் குழந்தைகள் தின விழாவில் தமிழ்நாடு முன்னாள் காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபு பேச்சு.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி இன்று இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.. அந்த வகையில்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தை களின் கல்வி,மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு ஏற்படி செல்போன்களை எப்படி பயனுள்ளதாக பயன்படுத்துவது என்பது குறித்து “திரை தவிர்” என்ற கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
அதில் தமிழ்நாடு முன்னாள் காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது தாய் தந்தையரிடம் மாற்றம் இருந்தால் குழந்தைகளிடமும் மாற்றம் வரும் என்றும் ஒவ்வொருவரும் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், வேலை பார்க்கும் 8 மணிநேரம்,தூங்கும் 8 மணிநேரம் தவிர மீதமுள்ள 8 மணி நேரத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் நம்நலம் சார்ந்த வாழ்க்கையின் வெற்றி அடங்கியிருக்கிறது என்றார்.
உடல்நலத்தோடு இருக்கிற மக்கள் மனமகிழ்வோடு இருக்கிறார்கள் என்றும் அந்தவகையில் தற்போது 156 நாடுகளில் வைக்கப்பட்ட சர்வேயில் நாம் 130 வது இடத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குழந்தைகள் தங்கள் மொழித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் குறிப்பாக தாய்மொழியாம் தமிழ்மொழியை கற்க வேண்டும், அதுதான் சிந்திக்கும் திறனை அதிகப்படுத்தும் சிந்திக்கும் திறன் பெற்றவர்களுத்தான் உலக அரங்கில் வேலை கிடைக்கும் என்றும் அறிவியல் கணிதம் இல்லாமல் உலகம் இல்லை,குழந்தைகள் இவற்றை கற்றுக்கொள்ள பெற்றோர்கள் உதவ்வேண்டும் என்றார்.
செல்போன் பார்ப்பதை குறைத்தாலே தகவல் திருட்டில் இருந்து தப்பிக்கலாம் என்றும் கடந்த செப்டம்பர் வரை சைபர் மோசடியில் ரூ.1500 கோடி வரை மக்கள் பணம் பறிபோகியுள்ளது என்றார். திரை பார்ப்பது தொடர்நோய் அது மனநலத்தை பாதிக்கும்,தொடர் பிரச்சனை ஏற்பட்டு கல்வி பறிபோகும் எதையும் கற்றுக்கொள்ள முடியாது என்றார்.
இக்கருத்தரங்கில் பள்ளி ஆசிரியர்கள்,மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்,அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..