தோட்டத்தில் காய்கறி பறித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!! பாஜக பிரமுகர் செல்வகுமாருக்கு போலீஸ் வலைவீச்சு..!!
நெல்லையில் காய்கறி தோட்டத்திற்குள் சென்ற இளம்பெண்ணுக்கு பாஜக நிர்வாகி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது..
கடந்த சில மாதங்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டம் பழனி சாமிநாதபுரம் கிராமத்தில் சத்துணவு கூடத்தில் வேலை பார்த்து வந்த பெண்ணை திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் மதுபோதையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.. இதுகுறித்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது அவரது மனைவி செல்வராணி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பதால் அவருக்கு பதில் சத்துணவு கூடத்தை ஆய்வு செய்ய சென்றேன் என கூறியுள்ளார்..
அதன்பின் மகுடீஸ்வரனை கட்சியில் இருந்து நீக்குமாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கடிதம் எழுதப்பட்டது இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த பிரச்சனை ஓய்வதற்குள் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தெற்கு கும்பிளம்பாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் இவர் பாஜக மாவட்ட ஊடகப்பிரிவு தலைவராக இருக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அவரது வீட்டு பக்கத்தில் உள்ள தோட்டத்தில் காய் பறித்துக்கொண்டிருந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்..
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் இதுகுறித்து புகாரை ஏற்ற காவலர்கள் செல்வகுமாரை கைது செய்ய சென்றபோது., அவர் தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது.. தலைமறைவாகவுள்ள செல்வகுமாரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்..
தன்னுடைய சொந்த தோட்டத்திற்குள் காய் பறித்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு பாஜக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..