இரக்கம் இல்லாத கொடுர தந்தை… பிறந்து 14 நாட்களே ஆன பிஞ்சு குழந்தைக்கு அரங்கேறிய கொடுரம்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் சங்கேரி இருளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மாதையன். கூலி தொழில் செய்து வரும் இவருக்கு திருமணமாகி முதல் மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மாதையன் ஒன்னுகுறிக்கை கிராமத்தை சேர்ந்த சின்னம்மா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில், மீண்டும் கர்ப்பமடைந்த சின்னம்மாவிற்கு கடந்த 14 நாட்களுக்கு முன்பு 3 வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஏற்கனவே நமக்கு 1 மகனும் 2 பெண் குழந்தைகள் உள்ளது எனவே 3 வது பிறந்த பெண் குழந்தை நமக்கு வேண்டாம். இந்த குழந்தையை கொன்று விடலாம் என்று சின்னம்மாவிடம் மாதையன் நேற்று முன்தினம் இரவு கூறியுள்ளார். அதற்கு அவருடைய மனைவி எதிர்ப்பு தெரிவித்து தகராரில் ஈடுப்பட்டுள்ளார்.
இதனால் அவரை தாக்கி குழந்தையை தூக்கி சென்றுள்ளார். இவரது பின்னால் பின்தொடர்ந்து மனைவி வருவதை கண்ட மதையன் திடிரென காணமல் போனர்.
இந்த நிலையில் இரக்கமே இல்லாமல் பெற்ற குழந்தையை பாரை மீது வீசி சென்றுள்ளார் அந்த கொடுர தந்தை.
தகவல் அறிந்து சின்னம்மா சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது குழந்தை இரத்த வெள்ளத்தில் சுய நினைவின்றி இருந்ததை கண்ட தாய் உடனே குழந்தையை ஆரம்ப சுகதார மருத்துவமணைக்கு அழைத்து சென்றார்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைதொடர்ந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து மாதையனை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்