இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் தனது வீட்டில் இருந்து 25 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் 2 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களையும் சக வீராங்கனை திருடி சென்று விட்டதாக புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மாவும் அருசியும் நெருங்கிய தோழிகள். இவரும் உள்ளுர் போட்டிகளில் ஆடி வந்தனர். தற்போது, பெண்கள் ஐ.பி.எல் தொடரில் உ.பி வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் அருசி வீட்டில் இருந்துசூ 25 லட்சம் மதிப்புள்ள நகைகள், 2 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை திருடி சென்று விட்டதாக ஆக்ரா போலீசில் புகார் அளித்துள்ளார். தீப்தியின் சகோதரர் அளித்துள்ள புகாரில், ஆக்ராவிலுள்ள தனது வீட்டை உடைந்து அருசி திருட்டில் ஈடுபட்டதாக புகாரில் குற்றம் சாட்டியுள்ளார் . மேலும், வீட்டுக்கு வேறு ஒரு பூட்டையும் அருசி போட்டு விட்டு சென்று விட்டதாக புகாரில் சொல்லப்பட்டுள்ளது.
தற்போது, இந்திய அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. எனவே, தீப்தி இங்கிலாந்தில் உள்ளார்.உத்தரபிரதேச போலீசில் டி.எஸ்.பி ரேங்கில் தீப்தி உள்ளார். தற்போது, அருசி இந்திய ஏ அணிக்காக விளையாடி வருகிறார். தீப்தியின் சகோதரர் கொடுத்த புகார் குறித்து அருசி இன்னும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.