வங்க தேசத்தை குறி வைத்துள்ள டெங்கு..!! அதிகரிக்கும் உயிர் இழப்பு எண்ணிக்கை..!!
வங்க தேசத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் நோயால், 778 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,57,172 தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பேசிய அந்நாட்டு சுகாதாரத்துறை, முறையான முன்னெச்சரிக்கை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் எடுக்காததால், நோய்த் தொற்று அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் கொடுத்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 143 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிசெய்யபட்டுள்ளது என்றும் மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் 7 நாட்களில் 11 குழந்தைகள் உட்பட 37 பேருக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெங்கு பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும், காய்ச்சல் வந்தால் வீட்டிலேயே இல்லாமல் முறையான சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், கட்டுமானப் பணிகளில் தேங்கும் நல்ல தண்ணீரில் டெங்கு கொசுக்கள் பெருகுவதாக கூறிய அவர், இது தொடர்பாக கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஆலோசனை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..