கள்ளகுறிச்சி விஷ சாராயம்..! உயர்ந்த பலி எண்ணிக்கை..!
கள்ளக்குறிச்சி கருணா புறம் பகுதியில் விச சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 20 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் மூன்று பேர் அனுமதிக்கப்பட்ட அன்றைய தினமே உயிரிழந்தனர் இந்நிலையில் மீதமுள்ள 17 பேருக்கு ஜிப்மர் மருத்துவமனை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தது இதில் ஆறு பேர் மிகவும் கவலைக்கிடமாக இருந்தனர்.
ஆனால் தொடர்ந்து ஜிப்மர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர் குழு அதிதீவிர சிகிச்சைகளை அளித்ததன் அடிப்படையில் 6 பேர் குணமாகி வீடு திரும்பினர் மேலும் நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது.
இந்நிலையில் கவலைக்கிடமாக இருந்த நான்கு பேர் உட்பட ப11 பேர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் நேற்றைய முன் தினம் காலை 35 வயது உடைய ஏசுதாஸ் மற்றும் 61 வயதான ராமநாதன் ஆகியோர் உயிரிழந்தனர்.
நேற்று மாலை மகேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் தற்போது மூளை சாவு அடைந்த பெரியசாமி (41 வயது) என்பவர் மரணம் அடைந்துள்ளார் மொத்தம் இதுவரை புதுச்சேரியில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜிப்மர் மருத்துவர்கள் தொடர்ந்து உயிரை காப்பாற்ற 8 நாட்கள் போராடிய நிலையில் தற்போது இவர்களது உயிர் பிரிந்துள்ளது ஜிப்மர் மருத்துவமனையில் தற்பொழுது 7பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்..
மருத்துவர்கள் தொடர்ந்து இவர்கள் உயிரை காப்பாற்றும் முயற்சியில் சிகிச்சை அளித்து வருகின்றனர்..
இதுவரை கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் மொத்த மரண எண்ணிக்கையானது 65 ஆக உயர்ந்துள்ளது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..