உண்டியலில் காணிக்கை செலுத்திய நபரை தேடும் போலீஸ்..?
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பிலியனூர் அக்ரஹாரம் பகுதியில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை தினங்களிலும் முக்கிய திருவிழா மற்றும் ஆண்டு தோறும் வரும் மார்கழி மாதம் இரண்டாவது செவ்வாய் கிழமைகளில் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம்… நேர்த்திக்கடனாக ஆயிரக்கணக்கான ஆடு கோழிகள் பலியிட்டு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.
இக்கோயிலின் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்த உண்டியலை அறநிலையத்துறை அதிகாரிகள் மாதத்துக்கு ஒரு முறை உண்டியலை திறந்து அதில் இருக்கும் பணத்தை எடுத்து வருகின்றனர்.
நேற்று முனியப்பன் கோயில் உண்டியல் என்னும் பணி தருமபுரி அறநிலையத்துறை சார்பில் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது அப்போது அந்த உண்டியலில் ஒரு காசோலை இருந்ததை எடுத்தனர்…
“அதில் 90 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 256 ரூபாய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர்.
உடனே காசோலையை கைப்பற்றிய அதிகாரிகள் அதில் “மகேந்திரன்” என்பவர் சவுத் இந்தியன் வங்கிக்கான கணக்கில் காசோலையில் போடப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த காசோலை செலுத்திய நபர் கணக்கு தருமபுரி சவுத் இந்தியன் வங்கியில் உள்ளதா என்றும் அவ்வாறு இருக்கையில் அந்த கணக்கில் பணம் உள்ளதா என்பது குறித்து இன்று சவுத் இந்தியன் வங்கியில் அறநிலை துறை அதிகாரிகள் விசாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது உண்மையான காசோலையா அல்லது பரபரப்பை ஏற்படுத்துவதற்காக போடப்பட்ட காசோலைய்யா என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் வங்கிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகை காசோலையாக போடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..