திருப்பூரில் கனமழையின் காரணமாக மழை நீர் குடியிருப்புக்குள் புகுந்தது…
திருப்பூரில் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக மழை நீர் குடியிருப்பு புகுந்து பாதிக்கப்பட்ட இடங்களில் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காந்திநகர் மும்மூர்த்தி நகர், அங்கரிபாளையம், உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்தது. இதனால் பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட இடங்களில் மாநகராட்சி நேயர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்ததோடு மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தினர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.