கோவை மாநகராட்சி 95 வது வார்டிலுள்ள அண்ணா நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொதுக் கழிப்பிடம் இருக்கிறது. சமீபத்தில் இந்த கழிப்பிடம் புனரமைக்கப்பட்டு பெயிண்ட் பூசப்பட்டது.
அதோடு கழிப்பறையின் முன்பக்கச் சுவரில், திமுக நிறுவனரும் முன்னாள் தமிழக அமைச்சருமான அண்ணாதுரையின் பெயர் எழுதப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மறைந்த கக்கன் பெயரும் எழுதப்பட்டுள்ளது. பெரும் அரசியல் தலைவர்களின் பெயரை பொது கழிப்பறைக்கு வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட கண்டன அறிக்கையில், “கக்கன், அண்ணா போன்ற உயர்ந்த தலைவர்களின் பெயர் கழிப்பறைக்கு வைக்கப்பட்டது அதிர்ச்சிரயை தருகறது. எவ்வளவோ திட்டங்களுக்கு அவர்களின் பெயர் வைக்காமல் கழிப்பறைக்கு அவர்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது. உடனடியாக, இந்த பெயர்களை நீக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.
கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரனிடம் கேட்டபோது, “15 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. தற்போது இந்த கட்டடத்துக்கு புதிதாக பெயிண்ட் மட்டுமே அடிக்கப்பட்டது. பெயர்கள் தற்போது எழுதப்படவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
பலத்த கண்டனம் எழுந்ததையடுத்து, தற்போது தலைவர்களின் பெயர் அழிக்கப்பட்டுள்ளன.