மழைநீர் தடுப்பால் ஏற்பட்ட வாக்குவாதம்..!! விபரீதத்தில் முடிந்த சண்டை..!! பரபரப்பான வேலூர்..!!
மழைநீர் வீட்டில் புகாமல் தடுக்கும் சண்டையில் மூக்கை கடித்து துப்பி, பல் உடைப்பு அண்ணன் தம்பி படுகாயம் பரபரப்பான வேலூர்…
வேலூர் மாவட்டம் திருவலம் காரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பரசுராமன் நேற்று பெய்த மழையால் ஏற்பட்ட. மழைநீர் வீட்டிற்குள் வருவதை தடுக்க மண்ணை கொட்டி முயற்சி செய்துள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த பக்கத்து வீட்டுக்காரரான ரமேஷ் என்பவர் மண்ணைக் கொட்ட கூடாது என தகராறு செய்துள்ளார் நான் எங்கள் வீட்டிற்கு வரும் மழைநீரை தடுப்பதற்காகத்தான் மண்ணைக் கொட்டி உள்ளேன். அதை ஏன் நீங்கள் தடுக்கிறீர்கள் என்று பரசுராமன் கேட்டுள்ளார்.
அப்போது பரசுராமனை, ரமேஷ் ஆக்கி மட்டையால் தலையில் அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளார். அண்ணன் பரசுராமனை அடிப்பதை பார்த்த தம்பி தமிழரசன் அப்பொழுது ஓடி வந்து தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது ரமேஷ் தமிழரசனின் மூக்கை கடித்து துப்பியுள்ளார்…ரத்தம் சொட்ட சொட்ட மூக்கை பிடித்து கொண்டு நின்ற தமிழரசனை ரமேஷின் தம்பி அருள் வாயில் பலமாக குத்தியுள்ளார்..
அதில் தமிழரசனின் பல் உடைந்து தரையில் சிதறி உள்ளது…உடனடியாக பரசுராமன் திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் காயமடைந்த இருவரையும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.அங்கு பரசுராமனுக்கு தலையில் ஆறு தையல் போடப்பட்டுள்ளது..
தமிழரசனுக்கு கடித்து துப்பட்ட மூக்கின் பகுதியினை மீண்டும் அதே இடத்தில் பொருத்தி சிகிச்சை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது…
இந்நிலையில் போலீஸார் பரசுராமன் மற்றும் தமிழரசன் உள்ளிட்வர்களை அழைத்துப் பேசி ரமேஷ் மற்றும் அருள் மீது புகாரினை பெற்று இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். சாதாரண சண்டையில் பல்லை உடைத்து மூக்கை கடித்து துப்பிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..