பெண் பத்திரிசிகையாளர் குறித்து சர்ச்சை பேச்சு..! எஸ்.வி.சேகர் மனு தள்ளுபடி..!!
பெண் பத்திரிக்கையாளர் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கை எதிர்த்த எஸ்.வி.சேகர் மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு பெண் பத்திரிக்கையாளர் குறித்து சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக பேசி முகநூல் பக்கத்தில் கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.., நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர்.
இதனை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் செயலாளர் புகார் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் சென்னை சைபர் க்ரைம் போலீசார் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தவறான தகவல்கள் பதிவிட்டதும். தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் யூடியூபில் வீடியோ வெளியிட்ட குற்றத்திற்காக எஸ்.வி.சேகர் எதிரான ராஜரத்தினம் என்பவர் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பெயரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த இரண்டு வழக்குகளும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்க கூடிய சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி.., நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் தனது பதிவுகளை உடனடியாக நீக்கியதோடு.., மன்னிப்பும் கேட்டுள்ளார்.
அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த.., வழக்கறிஞ்சர் ஒரு தவறான கருத்துக்களை பதிவிட்டு விட்டு மன்னிப்பு கேட்டால் எல்லாம் முடிந்து விடுமா என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நீதிபதி வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.. இந்நிலையில் இன்று காலை இந்த வழக்கிற்கு நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கை எதிர்த்த எஸ்.வி.சேகர் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி தேசிய கொடி தொடர்பான வழக்கையும் ரத்து செய்துள்ளார்.
பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு குறித்து மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். இந்த பாதிப்பை மன்னிப்பு மூலம் சரிக்கட்டி விட முடியாது என.., எனக்கு தெரியும். எனக்கு வந்த தகவலை தான், நான் மற்றவருக்கு தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டேன்.
இந்த வழக்கு குறித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி வெங்கடேசன் தாக்கல் செய்த ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.., இன்னும் 6 மாதத்திற்குள் முடித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்க கூடிய நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.
Discussion about this post