“தொடரும் ஆணவ படுகொலைகள்.. ” தமிழக அரசு எடுக்க போகும் நடவடிக்கை..! அமைச்சர் ரகுபதி பேட்டி..!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாகவும், முன் விரோதம் காரணமாக நடந்த சில கொலை சம்பவத்தை தேர்தல் தோல்வி, அரசியல் காரணத்திற்காக எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சிப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தமிழ்நாடு கலை மற்றும் அறிவுசார் மாநிலமாக இருந்து வருகிறது. ஆனால் எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கொலை மாநிலமாக தமிழகம், இருப்பதாக தேர்தல் தோல்வி காரணமாக பேசி வருவதாக பதில் அளித்தார்.
அதேபோல் அதிமுக ஆட்சியில் கொடநாடு கொலை வழக்கு நடந்ததில் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி என்ன நடவடிக்கை எடுத்தார்..? என கேள்வி எழுப்பினார்.
மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் கூட தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என பேசியது போல் தற்போதைய திமுக அரசு இல்லை என தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த சில கொலை சம்பவம் முன் விரோதம் தான் காரணமாக மட்டுமே நடந்ததாவும், தமிழகத்தில் ரவுடிகள் பட்டியலை வைத்து ரவுடிகள் ஏ மற்றும் பி பிரிவை சேர்ந்தவர்களை காவல்துறை கையில் வைத்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும்
சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சிறப்பாக இருக்கிறது என்றும், அதனால் தான் பல முதலீட்டாளர்கள் தமிழகம் நோக்கி வருவதாக தெரிவித்தார்.
இந்தியாவிலேயே தமிழகம் அமைதியான மாநிலமாக இருக்கிறது. அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு தேவை என்றால் அதற்கான நடவடிக்கை எடுப்போம் எனவும், கிளை சிறைகள் எதுவும் மூடவில்லை சில இடத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதாக தெரிவித்தார்.
தருமபுரி ஆவண கொலை தொடர்பாக பதில் அளித்த அமைச்சர் ஆணவ படுகொலையை தமிழக அரசு ஆதரிக்கவில்லை என்றும், இதுபோன்ற சம்பவத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்றும், அதிகப்பட்சமாக ஆயுள் தண்டனை கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..