தொடர்ந்து புலிகள் இறப்பு..!! அரசின் மவுனம் ஏனோ…?
நீலகிரி வனப்பகுதியில் ஒரு மாதத்தில் மட்டும் 10 புலிகள் இறந்துள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன் 4 புலிக்குட்டிகளை வைத்திருந்த தாய் புலியை, பவாரியா இனத்தைச் சேர்ந்த கும்பல் கொலை செய்ய வாய்ப்பு இருக்கிறது. தாய் புலி இல்லாது பசியால் புலிக்குட்டிகளும் இறந்துவிட்டது.
வனத்துறை கள்ள மவுனம் ஏனோ… அரசும் எதுவும் நடக்காதது போல் மவுனம் காப்பதும் ஏனோ… வனத்தில் வனவிலங்குகள் இறந்து போகிறது என்றால், நாடு அழிவை சம்பாதிக்க துணிந்து விட்டது என்று அர்த்தம்.
காட்டு யானைகள் இறப்பு என்றாலும் மவுனம். புலிகள் இறப்பு என்றாலும் மவுனம். எங்கே செல்கிறது நாடு. என் அடுத்த தலைமுறை எப்படி தலைக்கும். வனத்தில் வனவிலங்குகள் இறந்தால் வனம் அழிவை நோக்கி நகர்ந்து வருகிறது என்று அர்த்தம்.
வனத்தில் நடக்கும் அசாதாரண சூழ்நிலை கருத்தில் கொண்டு அவசரநிலை கருதி இந்த நேரத்திலாவது அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா..?
இலவசங்களை வழங்கி ஓட்டு வங்கியை நிரப்ப நினைக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு இயற்கையை பற்றிய கவலை எதற்கு இருக்கப்போகிறது. அதைப் பற்றி சிந்திக்க ஏது நேரம். கொடுமை… கொடுமை….
வனத்தில் புலிகள் அழிந்தால் மான்களின் இனப்பெருக்கம் அதிகமாகும். மான்கள் அதிகமானால் வனத்தில் ஒரு செடி கொடி இருக்காது. உணவு சங்கிலி துண்டிக்கப்பட்டால், வனத்தில் எதுவும் இருக்காது.
தமிழக மக்களே வனத்தில் வனவிலங்குகள் இறக்கிறது என்றால் மனித இனத்திற்கு ஆபத்து நெருங்குகிறது என்று அர்த்தம். இனியாவது மக்கள் விழிப்படைய வேண்டும்.
நம்முடைய அடுத்த தலைமுறை வாழ வனத்தை காக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து அரசியல் கட்சிகளின் பாகுபாடின்றி குரல் கொடுங்கள்.
ஒரு மாதத்திற்குள் 10 புலிகள் இறப்பு என்பது சாதாரண விசயம் அல்ல..! வனத்தை கைப்பற்ற ஏதோ சதி வேலை நடக்கிறதோ, என்ற சந்தேகம் எழுகிறது. விழிப்பாய் தமிழனே!
வனத்தின் மரங்களை வெட்டவும், மலைத்தொடரை நொறுக்கி பணமாக்க நினைக்கிறதா ஒரு கூட்டம்….?
Discussion about this post