வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் ரூ.200 குறைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததால் அதன் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து எதிர்கட்சியினர் தேர்தல் முன்னிட்டு அரசியல் நாடகம் செய்வதாக பாஜகவை குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுத்தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி?
சமையல் காஸ் விலையை ரூ200 குறைத்திருப்பதே அறிகுறி! ரூ1100 க்கு மேல் விலை வைத்து மக்களைக் கசக்கிப் பிழிந்த அரசு திடீரென்று விழித்துக் கொள்கிறது பாரீர்!
வெள்ளித்திரையில் விரைவில் காண்க! பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு! என பதிவிட்டுள்ளார்.
தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி?
சமையல் காஸ் விலையை ரூ200 குறைத்திருப்பதே அறிகுறி!
ரூ1100 க்கு மேல் விலை வைத்து மக்களைக் கசக்கிப் பிழிந்த அரசு திடீரென்று விழித்துக் கொள்கிறது பாரீர்!
வெள்ளித்திரையில் விரைவில் காண்க! பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு!
— P. Chidambaram (@PChidambaram_IN) August 30, 2023