மதமும் அரசியலும் வெவ்வேறானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உதயநிதியின் சனாதன கருத்துக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என தெரிவித்தார். இதைப் பிடித்துக்கொண்ட பாஜக மற்றும் இந்துத்துவவாதிகள் இந்துக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் எனக் கூறியதாக கட்டுக்கதை கட்டி எதிர்ப்புக் குரலை தெரிவித்தும் அமைச்சர் மீது வழக்கும் பதிவு செய்தும் வருகின்றனர். அதற்கு நேர்மாறாக இடது சாரிகள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு உங்களின் விளக்கம் என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்கே, ”இது குறித்து நான் விவாதிக்க விரும்பவில்லை. மதமும், அரசியலும் வெவ்வேறானவை. அவை இரண்டையும் கலக்கத் தேவையில்லை,” எனக் கூறினார்.
Discussion about this post