ராகுல் காந்தி கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் தனது நடைப் பயணத்தை தொடங்கிய நிலையில் கேரளாவில் பல நாட்கள் பயணம் மேற்கொண்டு முடித்துள்ளார். ஒற்றுமை இந்தியா நடைப்பயணத்தை 23 வது நாளாக தொடரும் நிலையில் இன்று கர்நாடகாவில் சென்ற நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு முன்னாள் முதல்வர் சித்தராமய்யா, சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்துள்ளார். பின்னர் பேசிய ராகுல், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறேன். இந்த பயணத்தின் போது பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ்-ன் உண்மையான நோக்கத்தை மக்களிடம் அம்பலப்படுத்தி வருகிறேன் என்றார்.
மக்களிடம் பிளவு ஏற்பட காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது என்றார். ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை முன்னிட்டு அடுத்த மாதம் 4 மற்றும் 5ம் தேதி அன்று நடை பயணத்தை நிறுத்தி வைக்க ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். பல்வேறு மாநிலங்கள் வழியாக மேலும் பல ஆயிரம் தூரம் கடந்து இறுதியாக காஷ்மீரில் தமது நடைப்பயணத்தை ராகுல் காந்தி நிறைவு செய்யவுள்ளார்.