சவுக்கு சங்கர் நீதிமன்ற அவமதிப்பு குற்ற செயலுக்காக கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தற்போது அவரை பார்க்க வருபவர்களை சந்திக்க ஒரு மாதத்திற்கு சிறை நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் தன்னை சந்திக்க வருபவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சவுக்கு சங்கர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சவுக்கு சங்கர் தனது சமூக வலைதள பக்கத்தில் உயர் நீதிமன்ற நீதிபதியான சாமிநாதன் பற்றி அவதூறாக கருத்து பதிவு செய்திருந்தார். மேலும், நீதித்துறை அனைத்தும் ஊழலில் சிக்கியுள்ளதாக பேசினார். இது குறித்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரணை செய்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மீண்டும் அவகாசம் வேண்டும் என்று சவுக்கு சங்கர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பின், ஊடகங்களில் அதுபோல பதிவுகளை செய்ய மாட்டேன் என நீதிபதி உறுதி அளிக்க கேட்டுள்ளார். இருப்பினும், சவுக்கு சங்கர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் சவுக்கு சங்கருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. இதன் விளைவாக சவுக்கு சங்கரை நிரந்தரமாக அரசு பணியில் இருந்து நீக்கியது லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு துறை.