நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் இப்போது ரிலீஸ்க்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தளபதி 67 படத்தின் பூஜை ரகசியமாக நடந்து முடிந்துள்ளது.
விஜயின் வாரிசு படத்தை விட அவரின் அடுத்த படமான தளபதி 67 படத்திற்கு பெரிதும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. வெற்றி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் இணைந்த இரண்டாவது படமாக இந்த படம் அமைகிறது. இந்த படத்தில் விஜக்கு பல மாநிலங்களில் இருந்து பல நடிகர்களை வில்லனாக தேர்வு செய்துள்ளனர். தமிழ் சினிமாவில் புதிய முயற்ச்சியான யூனிவெர்ஸ் கான்செப்ட்டில் விஜயின் பெயரும் இடம் பெருமை என்பதுதான் ரசிகர்களுக்கு இருக்கும் மிக பெரிய எதிர்பார்ப்பு. இந்நிலையில்தான் சென்னையில் அப்படத்தின் பூஜைகள் ரகசியமாக நடந்து முடிந்துள்ளது.
தளபதி 67 படத்தின் பூஜை குறித்தன பூஜிப்படங்கள் இணையத்தில் வெளியாகும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்த பொது அது குறித்த எந்த ஒரு தகவலும் வெலிகம ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. புகைப்படம் வெளியாகமல் இருப்பதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. ஆனால், வாரிசு படம் வெளியாக இருப்பதால் அந்த படத்தின் ப்ரோமோஷன் படு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தளபதி 67 குறித்தான அப்டேட் வந்தால் அது வாரிசு படத்தின் ப்ரோமோஷனை பாதிக்கும் என்பதால் விஜய் பூஜை புகைபடங்களை வெளியிட வேண்டாம் என்று கூறியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துவருகின்றனர்.