வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையை ரூ.25 ரூபாய் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் இறக்கம், அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றனர்.
இந்நிலையில் வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, சென்னையில் இன்று முதல் ரூ.2,045-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.25.50 குறைக்கப்பட்டு ரூ.2,009 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இருந்தபோதிலும் வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1068 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 6 மாதங்களில் 6 முறை வணிக சிலிண்டர் விலை குறைந்தது குறிப்பித்தக்கது.