கீழே வாடா நாயே..!! பேருந்து நிறுத்தத்தில் அடவாடி செய்த பாஜக ரஞ்சனா..!! போலீஸ் வைத்த செக்..?
நான் டிரெஸ் சேஞ் செய்துக்கொண்டிருந்த போது என் படுக்கை அறை பக்கத்தில் உள்ள ஜன்னலை ஆண் போலீசார் தட்டினார்.., இதனால் போலீசுக்கும் ரஞ்சனாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு நிர்வாகி நடிகை ரஞ்சனா நாச்சியார்.., இவர் நேற்று குன்றத்தூர் வழியாக சென்றுள்ளார்.., அப்போது குன்றத்தூர் டூ போரூர் செல்லும் அரசு பேருந்தில் சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டும். பஸ்ஸின் மேலே ஏறிக்கொண்டும் சென்றுள்ளனர்..
அப்போது அந்த பக்கம் சென்ற ரஞ்சனா, பேருந்து ஓட்டுனரை சரமாரியாக திட்டியுள்ளார்.., பேருந்தில் இப்படி ஒருத்தன் மேல ஒருத்தன் ஏறி அராஜகம் செய்யுறான் இவன எல்லாம் நீங்க செருப்பால அடிச்சு இறக்கி விடாம.., உங்களுக்கு என்ன வந்துச்சுன்னு பஸ் ஓட்டுவது சரியா..?
ஓட்டுனரை திட்டிவிட்டு, படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களிடம், கீழே இறங்கிவாட நாயே, என சொல்லி அழைத்துள்ளார்.., மாணவர்கள் வர மறுத்ததால் அவர்களின் தலையிலும் கன்னத்திலும் அடித்து கீழே இறக்கியுள்ளார்..,
பின் கன்டக்டரை பார்த்து.., உனக்கு எல்லாம் அறிவு இல்லையாட நாயே, இப்படி தொங்கிட்டு வராங்க பாத்துட்டு சும்மா இருக்க என அவரையும் பேசியுள்ளார்.
ரஞ்சனாவின் ஆதங்கம் மாணவர்களின் நலனுக்காக என்றாலும்.., அதை அவர் கையாண்ட விதம்.., பார்பவர்களையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
மனமுடைந்த ஓட்டுனர் சரவணன் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.., புகாரின் பெயரில் மாங்காடு போலீசார்.., ரஞ்சனாவின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்துள்ளனர். அப்போது காவல் அதிகாரிகளிடம் ரஞ்சனா வாக்குவாதம் செய்துள்ளார்.
போலீசிடம் வாக்குவாதம் செய்தற்கான காரணம் குறித்து ரஞ்சனா கூறுவது.., என் படுக்கை அறையில் நான் உடைமாற்றிக் கொண்டிருந்தேன் அப்போது அந்த சமையம் ஒரு போலீஸ் எங்கள் வீட்டு ஜன்னல் கதவை தட்டினார்.., கதவை திறக்காததால் படுக்கை அறையை எட்டி பார்கிறார்.., ஏன் நான் கதவை திறக்கும் வரை அவரால் காத்திருக்க முடியாதா..?
என்னை கைது செய்ய வேண்டுமென போலீசார் சொன்னார், நான் வாரண்ட் இருக்கிறதா என கேட்டேன், அதற்கு அவர் எஃப்ஐஆர் பதிவு செய்து விட்டோம் என சொன்னார்.., எஃப்ஐஆர் காப்பி கேட்டதற்கு நீங்க முதலில் வாங்க என போலீசார் அழைத்தார்.
நான் என் காரில் வருவேன் என சொன்னதற்கு உங்கள் மீது வழக்கு பதிவாகி விட்டதால் அப்படி செய்ய முடியாது என அவர் சொன்னார்.., அதற்கு காவல் அதிகாரி மறுத்ததால். ஏன் என்னை குற்றவாளியை போல நடத்துரிங்க.., நான் ஏன் வண்டியில தான் வருவேன் என சொல்லியுள்ளார் ரஞ்சனா.
அதற்கு பெண் காவலர்கள் நீங்கள் காவல் வாகனத்தில் தான் வர வேண்டும்.., உங்களுக்கு துணையாக தான் நாங்க வருகிறோமே பிறகு ஏன் பயம் என பெண் போலீசார் கேட்டதற்கு.., எனக்கு பயம் எல்லாம் இல்லை எந்த போலீசையும் நான் நம்பவில்லை.
மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு செல்வதை.., தட்டி கேட்டதற்கா.., என் மீது வழக்கு என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.., பின் பெண் போலீசார் ரஞ்சனாவை இழுத்து சென்று காவல் வண்டியில் ஏற்றியுள்ளனர்.., இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..