இடிந்து விழுந்த திருப்பூர் பனியன் நிறுவனம்..!! பலகோடி பொருட்கள் சேதம்..!! வேதனையில் திருப்பூர்..!!
திருப்பூரில் மழையுடன் கூடிய பலத்த சூறைக்காற்று வீசியதில் பனியன் நிறுவனம் இடிந்து விழுந்து விபத்து. நான்கு பேர்காயம். பலகோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்.
திருப்பூர் கூலி பாளையம் பகுதியில் கிஷோர் கார்மென்ஸ் என்ற பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 3000 சதுர அடியில் ஹாலோ பிளாக் கற்களை கொண்டு ஒரே கட்டிடமாக இந்த நிறுவனமானது கட்டப்பட்டுள்ளது.
மேலும் மேற்கூறையில் அலுமினிய தகடுகளால் ஆன கூலிங்சீட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கட்டிங், டெய்லரிங், அயனிங், என அனைத்தும் ஒரே கூரையின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் வடமாநில தொழிலாளர்கள் தமிழ் தொழிலாளர்கள் என 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கம் போல இன்றும் பணிக்கு வந்த தொழிலாளர்கள் தங்களது அன்றாட வேலைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து மாலை வேளையில் டீ அருந்துவதற்கான இடைவெளியில் அனைவரும் வெளியே உள்ளகடைக்கு சென்று உள்ளனர். இருப்பினும் 10க்கும் மேற்பட்டோர் பனியன் நிறுவனத்திற்குள் இருந்து பணியை செய்து வந்தனர்.
கனமழையோடு கூடிய சூறைக்காற்று வீசியதில், அலுமினியத்தால் ஆன தகர கொட்டகை, காற்றில் பறந்தது. மேலும் பலத்த சூறைக்காற்றின் வேகம் தாங்காமல் பனியன் நிறுவனத்தின் சுவர்கள் சரிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது.
திடீரென நடந்த இந்த விபத்தில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 10க்கும் மேற்பட்டோர் உள்ளேயே சிக்கி கொண்டனர். இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.
இதில் 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பபகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post