திருப்பூரில் மாவட்ட ஆட்சி தலைவர் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு..!! ஏன் தெரியுமா..?
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பபம் பதிவு செய்தது குறித்து சரிபார்க்கும் பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு..
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பதிவு செய்தது குறித்து சரிபார்க்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் அவர்கள் தெரிவித்தாவது, தமிழக முதலமைச்சர் ஆணைக்கினங்க, திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்பதிவு முகாம்கள் இரண்டு கட்டமாக நடைபெற்றது.
அந்த வகையில் இன்றைய தினம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட தேவேந்திரர் நகர் பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பதிவு செய்தது குறித்து சரிபார்க்கும் பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்கள். இந்த ஆய்வின் போது, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், தாராபுரம் வட்டாட்சியர் ஜெயஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..