சிங்கப்பூரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் தர்மன் சண்முகரத்தினத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் அதிபராக இருக்கும் ஹலிமா யாக்கோபின் 6 ஆண்டு கால பதவி காலம் செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவடைவதால் அங்கு நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதற்கான பிரசாரம் ஆகஸ்ட் 30ம் தேதியுடன் முடிந்தது. இந்த போட்டியில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம், எங் கோக் சாங், டான் கின் லியான் ஆகியோர் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், 64 வயதான தமிழரான தருமன் சண்முகரத்தினம் 70.4% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். சிங்கப்பூரின் 9வது அதிபராக தருமன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கப்பூர் அதிபருக்கு டிவிட்டர் பதிவில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,
சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மனுக்கு வாழ்த்துகள். உங்களுடைய தமிழ் பாரம்பரியமும், ஈர்க்கக்கூடிய தகுதிகளும் எங்களை பெருமையடைய செய்திருக்கிறது. உங்களது வெற்றி சிங்கப்பூர் மக்களின் பன்முகத்தன்மையை காட்டுகிறது. உங்களது ஆட்சிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Congratulations Thiru. @Tharman_S on being elected as the ninth President of Singapore.
Your Tamil heritage and impressive qualifications make us proud and reflect the diversity of Singapore's population. Wishing you a successful term.#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்! https://t.co/QEfrMV0vJW
— M.K.Stalin (@mkstalin) September 2, 2023